பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் ஓயமாட்டோம் - அமித்‌ஷா

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்‌ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது:-


காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது. யாரும் எங்களை தடுக்க முடியாது.

நான் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுகிறேன். யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்படும் என்று குடியுரிமை சட்டத்தில் எந்த ஒரு சட்டப்பிரிவாவது இருக்கிறதா என்று காட்டுங்கள் பார்க்கலாம். இது, குடியுரிமை அளிக்கும் மசோதா. குடியுரிமையை பறிக்கும் மசோதா அல்ல.

கடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின்போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதே செயலை செய்யும் பா.ஜனதாவை இப்போது எதிர்க்கிறது. ராஜஸ்தான் முதல்வர், தனது தேர்தல் அறிக்கையை சரி பார்க்கட்டும்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சில மாணவர்கள் தேசவிரோத கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். அவர்களை பாதுகாக்குமாறு ராகுல் காந்தியும், கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள்.

இவ்வாறு அமித்‌ஷா பேசினார்


Popular posts
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை
Image
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
Image
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Image