பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை

பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை 


        தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 30 - வார்டில் அரசு மாணவியர் விடுதி அமைக்கப்பட்டு இயங்கி வந்துள்ளது. இன்று நகராட்சி மூலம் அவ்விடுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட சில நபர்கள் அப்பகுதி மக்களிடம் கொரோனோ வைரஸ் தொற்றுள்ளவர்களை அந்த விடுதியில் வைக்கப் போவதாக பொய்யான தகவலை பரப்பியதால் அப்பகுதியில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டமாக ஒன்று கூடி விடுதியினை முற்றுகையிட்டனர். தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் காவல்துறையிைனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிறகு மக்களிடையே இத்தகவல் பொய்யானது என கூறிய பின் பொதுமக்கள் சென்றனர் இருப்பினும் விடுதியின் வாயிற்பகுதியில் முள் வேலி கொண்டு அடைத்து விட்டு பின் களைந்து சென்றனர் இவண்.A சாதிக்பாட்சா நிருபர் தேனிமாவட்டம்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Image
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை
Image